நாகை அருகே அந்தோனியார் ஆலய தேர்பவனியில் விவசாயம் செழிக்க வேண்டி நெற்கதிர்களை தொங்கவிட்டு வழிபாடு நடைபெற்றது.
நாகப்பட்டினம் அடுத்த கருங்கண்ணி புனித அந்தோணியார் ஆலய ஆண்டுப்பெருவிழா கடந்த 21ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேர் பவனியில் ஏராளமானபொதுமக்கள் பங்கேற்றனர். மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் மிக்கேல் அதிபர், அருளானந்தர், சவேரியார், கன்னிமரியாள், அந்தோணியார் ஆகியோர் எழுந்தருளினர். முன்னதாக, ஆலய பங்குத்தந்தை சவரிமுத்து சிறப்புத்திருப்பலியை செய்துவைத்தார். விளைச்சல் பெருக வேண்டி நெற்கதிர்களை தேர்களில் தொங்க விட்டு வழிபாடு நடைபெற்றது.