மக்கள் நீதி மய்யம் கட்சியில் தற்போது நிலவி வரும் ஜனநாயக விரோத போக்கு காரணமாக கட்சியின் துணை தலைவர் திரு டாக்டர் R.மகேந்திரன் கட்சியின் அடிப்ப்டை உறுப்பினர் பொறுப்பிலிருந்து வெளியேறினார்.
இந்நிலையில், அவருடைய நிலைப்பாட்டிற்கு ஆதரவு அளித்து திண்டுக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் திரு ஆயை ஜப்பார், தென் கிழக்கு மாவட்ட செயலாளர் திரு .ஓம்குமார் அவர்கள், தென் மேற்கு மாவட்ட செயலாளர் திரு.சிவசக்திவேல் மற்றும் வட மத்தி மாவட்ட செயாலாளர் திரு கருப்புசாமி ஆகியோர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்து உள்ளார்கள்.
மேலும் இவர்களை பின் தொடர்ந்து மாவட்ட துணை செயலாளர் B.R.வினோத்,கொடைகானல் நகர செயலாளர் முருகேஷன்,பழனி நகர செயலாளர் ஜிஜித்குமார் உள்ளிட்ட பலர் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்துள்ளனர்.