புரட்சித் தலைவி அம்மா பேரவை ஆலோசனைக்கூட்டம் பிப்ரவரி 15 ஆம் தேதி முதல், 22 ஆம் தேதி வரை நடைபெறும் என அதிமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், பேரவைச் செயலாளர் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தலைமையில் கூட்டங்கள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை மண்டல புரட்சித்தலைவி அம்மா பேரவை ஆலோசனை கூட்டம் அமைச்சர் செல்லூர் ராஜு ஆலோசனையின் கீழ் பிப்ரவரி 15-ம் தேதி நடைபெறுகிறது. சேலம் மண்டல அம்மா பேரவை கூட்டம் அமைச்சர் தங்கமணி ஆலோசனையின் கீழ், பிப்ரவரி 19-ம் தேதி நடைபெறுகிறது. கோவை மண்டல அம்மா பேரவை கூட்டம் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆலோசனையின் கீழ் பிப்ரவரி 20-ம் தேதியும், நெல்லை மண்டல அம்மா பேரவை கூட்டம் அமைச்சர் ராஜலெட்சுமி ஆலோசனையின் கீழ் பிப்ரவரி 16-ம் தேதி நடைபெறுகிறது.
திண்டுக்கல் மண்டல அம்மா பேரவை கூட்டம் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ஆலோசனையின் கீழ், பிப்ரவரி 17-ம் தேதி நடைபெறுகிறது.
திருவண்ணாமலை மண்டல அம்மா பேரவை ஆலோசனைக்கூட்டம் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் ஆலோசனையின் கீழ் பிப்.18-ம் தேதி நடைபெறுகிறது
கடலூர் மண்டல புரட்சித்தலைவி அம்மா பேரவை ஆலோசனைக்கூட்டம் அமைச்சர் எம்.சி.சம்பத் ஆலோசனையின் கீழ் பிப்.21-ம் தேதி நடைபெறுகிறது
சென்னை மண்டல அம்மா பேரவை ஆலோசனைக்கூட்டம் அமைச்சர் ஜெயக்குமார் ஆலோசனையின் கீழ் பிப்.22-ம் தேதி நடைபெறுகிறது
Discussion about this post