போராட்டத்தில் ஈடுபட்டு பணிக்கு வராத ஆசிரியர்கள் பணியிடங்களை காலிப்பணியிடங்களாக அறிவித்து பள்ளிக்கல்வித்துறை அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
ஆசிரியர்கள் உடனடியாக போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் என அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஏற்கனவே போராட்டத்தில் ஈடுபட்ட 447 ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இந்த நிலையில் நேற்றும் பல்வேறு இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களில் பலர் 15 நாள் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கைதானவர்கள் தொடர்ந்து பணியிடை நீக்கம் செய்யப்பட்டு வருகின்றனர்.அதன்படி இன்று 600க்கும் மேற்பட்டோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் ஆசிரியர்கள் பணிக்கு திரும்ப இன்று காலை 9 மணி வரை கெடு விதிக்கப்பட்டிருந்தது. கெடு முடிந்த நிலையில் பணிக்கு வராத ஆசிரிய பணியிடங்கள் காலிப்பணியிடங்களாக அறிவித்து பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இதையடுத்து காலிப்பணியிடங்களில் தற்காலிக ஆசிரியர்களை நியமிக்கும் நடவடிக்கையை அரசு தீவிரப்படுத்தியுள்ளது. காலிப்பணியிடங்களில் தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்கள் மற்றும் முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வி துறை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
Discussion about this post