300 ஆண்டுகள் பழமையான பூண்டி மாதா பேராலயத்தில் ஆண்டு பெருவிழா கொடியேற்றம்

தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியில் உள்ள 300 ஆண்டுகள் பழமையான பூண்டி மாதா பேராலயத்தில் ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.

திருக்காட்டுப்பள்ளியில் பழமை வாய்ந்த பூண்டி மாதா பேராலயம் அமைந்துள்ளது. பசிலிக்கா அந்தஸ்து பெற்ற இந்த ஆலயத்தில் ஏசுபிரான் சிலுவையில் அறையப்பட்ட மரத்துண்டின் ஒரு பகுதி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. வீரமாமுனிவரால் கட்டப்பட்ட இந்த ஆலயத்தின் ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியுள்ளது.

முன்னதாக மாதா உருவம் பொறிக்கப்பட்ட கொடி, பேண்ட் வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. கொடியை குடந்தை மறை மாவட்ட ஆயர் அந்தோணிசாமி புனிதம் செய்து பின்பு ஆலயம் முன்புள்ள பிரம்மாண்ட கொடிமரத்தில் ஏற்றி வைத்தார். அப்போது அங்கு கூடி இருந்த ஏராளமான பக்தர்கள் மரியே வாழ்க என முழக்கமிட்டு மாதாவை வழிபட்டனர்.

இந்த கொடியேற்ற நிகழ்ச்சியில் தமிழகம் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்பட பிற மாநிலங்களை சேர்ந்த ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து 10 நாட்களுக்கு நடைபெறவுள்ள இந்த திருவிழாவில் தினந்தோறும் சிறப்பு திருப்பலிகள் நடைபெற உள்ளன.

Exit mobile version