ஆண்டிகருப்பசாமி கோயில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியில் 300க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்டு சீறிப்பாய்ந்தன.
மதுரை மாவட்டத்தில் உள்ள மங்கலம்பட்டி அடுத்துள்ள வி.புதூர் பகுதியில் ஆண்டிகருப்பசாமி கோயில் உள்ளது. கோயிலில் திருவிழாவை முன்னிட்டு அங்குள்ள மாட்டு தொழுவத்தில் மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது. இதில் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 300க்கும் மேற்பட்ட காளைகள், மாடுபிடி வீரர்கள் பங்கேற்றன. இந்த காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டு சீறிப்பாய்ந்தன. இதில் வெற்றி பெற்ற காளைகளுக்கு அண்டா, குத்துவிளக்குகள் உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டது.
Discussion about this post