கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திமுக சார்பில் நடைபெற்ற போராட்டத்திற்கு, பெண்கள் பணம் கொடுத்து அழைத்துவரப்பட்டது அம்பலமாகியுள்ளது.
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திமுகவினர் குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவிற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தியதால், கள்ளக்குறிச்சியிலிருந்து கச்சிராபாளையம் செல்லும் சாலையில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வதற்காக, பெண்களுக்கு பணம் கொடுத்து அழைத்து வரப்பட்ட அராஜகமும் நடைபெற்றுள்ளது. மினி லாரிகளில் அழைத்துவரப்பட்ட பெண்களுக்கான பணத்தை, அவர்களை அழைத்து வந்த தரகர் திமுகவினரிடமிருந்து பெற்றுக்கொள்ளும் காட்சிகள் வெளியாகியுள்ளது.
Discussion about this post