கர்நாடக அணையிலிருந்து காவிரியில் திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு 10 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் உள்ள காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. கபினி, கேஆர்எஸ் அணைகள் விரைவில் முழு கொள்ளளவை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், பாதுகாப்பு கருதி அணைகளில் இருந்து காவிரியில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இந்தநிலையில், இரண்டு அணைகளில் இருந்தும் திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு 10 ஆயிரம் கனஅடியாக உயர்த்தப்பட்டுள்ளது. எனவே, தமிழகத்துக்கு வரும் காவிரி நீரின் அளவு மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கர்நாடக அணைகளில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால், டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.