பாலக்கோடு அருகே யானை தாக்கியதில் முதியவர் ஒருவர் உயிரிழந்தார்.
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே கரிகுட்டனூர் பகுதியை சேர்ந்த பொன்னூகான் என்பவர் வனபகுதியில் மாடுகளை ஓட்டிக் சென்றார். அப்போது எதிர்பாராத விதமாக அவ்வழியாக வந்த யானை ஒன்று பொன்னூகானை தாக்கியது. இதில் அவர் சம்பவ
இடத்திலேயே பரிதாபமாக உயரிழந்தார். இதனையடுத்து, பாலக்கோடு வனத்துறை மற்றும் மாரண்டஅள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தண்ணீர் தேடி வரும் யானைகளால் பொதுமக்களுக்கு ஆபத்து ஏற்படுவதாக கூறப்பட்டு வரும் நிலையில், வனப்பகுதியில் ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்கு விட வனத்துறை தடை விதித்துள்ளது.
Discussion about this post