பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி

பாலியல் வன்கொடுமைகளை எதிர்த்து மருத்துவ வல்லுநர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் நடைபெற்றது.

உலக பாலியல் சங்கம், சென்னை பல்கலைக்கழகம், இந்திய பாலியல் சங்கம், இந்திய மகப்பேறு மருத்துவர்கள் சங்க பாலியல் நல கமிட்டி, தென்னிந்திய மகப்பேறு மருத்துவர்கள் சங்கம் ஆகியவை இணைந்து குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை எதிர்த்து மாபெரும் விழிப்புணர்வு நடை பயண பேரணியை நடத்தினர். இந்த விழிப்புணர்வு பேரணியில் மருத்துவ வல்லுனர்கள், பொதுமக்கள், மாணவ, மாணவியர் என ஏராளமானோர் பங்கேற்றனர். பெண்களை பாதுகாப்போம், பெண்களுக்கான உரிமைகளை கோருவோம், ஆரோக்கியமான பாலியல் நலத்தை பேணுவோம்,  பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக போராடுவோம் போன்ற கருத்துகளை வலியுறுத்தி பேரணியில் பங்கேற்றோர் பதாகைகளை ஏந்திச் சென்றனர்.

Exit mobile version