கும்பகோணம் அருகே உடையாளூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் அமமுகவினர் ரகளையில் ஈடுப்பட்டதால் தேர்தல் ரத்து செய்யப்பட்டது.
தஞ்சை மாவட்டம், உடையாளூரில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் 1,900 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இதனிடையே இந்த சங்கத்தின் இயக்குநர் தேர்தல் நடைபெற்றது. இதில் 413 வாக்குகள் பதிவான நிலையில் அமமுகவினர், ரகளையில் ஈடுப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து தேர்தல் சிறிதுநேரம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இருப்பினும் மீண்டும் தேர்தல் நடந்தால் அமமுகவினர் மோதலில் ஈடுபடுவார்கள் என்ற நிலை இருந்ததால், தேர்தல் நடத்தும் அலுவலரான கூட்டுறவு சார்பதிவாளர் தமிழ்ச்செல்வி தேர்தலை ரத்து செய்வதாக அறிவித்தார். அதேபோல், அமமுக பிரமுகர் காமராஜ் அரிவாளை காட்டி மிரட்டியதால், காவல்துறையினர் அவரிடம் விசாரித்து வருகின்றனர்.