அதிமுகவில் இணையும் அமமுக முக்கிய நிர்வாகிகள்

தருமபுரி மாவட்டத்தில் அமமுக கட்சியில் இருந்து விலகிய முக்கிய பிரமுகர்கள் அதிமுகவில் தங்களை இணைத்துக்கொண்டனர்.

தருமபுரி மாவட்ட அதிமுகவிலிருந்து பிரிந்து சென்ற முன்னாள் மாவட்ட செயலாளரும், மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞரணி
செயலாளருமான பூக்கடை முனுசாமி, அரூர் நகர கழக செயலாளர் திருவேங்கடம் மற்றும் முக்கிய நிர்வாகிகள் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திலிருந்து பிரிந்து மீண்டும் அதிமுகவில் இணைந்தனர். தருமபுரி மாவட்ட கழக செயலாளரும்,தமிழக உயர்கல்வித்துறை அமைச்சருமான கே.பி.அன்பழகன் தலைமையில் மீண்டும் இவர்கள் அதிமுகவில் இணைந்தனர். தர்மபுரி கிருஷ்ணகிரி ஒருங்கிணைந்த மாவட்ட ஆவின் கூடுதல் சங்க தலைவர் டி.ஆர் அன்பழகன், பாப்பிரெட்டிப்பட்டி சட்டப்பேரவை உறுப்பினர் கோவிந்தசாமி உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Exit mobile version