திண்டுக்கல் அருகே முறைகேடாக மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த அமமுக பிரமுகரை போலீசார் கைது செய்தனர்.
தொழிலாளர் தினமான இன்று திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் உள்ள அரசு மதுபானக் கடைகள், மதுக்கூடங்கள், மற்றும் தனியார் உணவகங்களில் உள்ள மதுக்கூடங்களை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டிருந்தார். இந்தநிலையில் நாயக்கர் புது தெரு பகுதியை சேர்ந்த அமமுக பகுதி செயலாளரான பாண்டி என்பவர் தனது வீட்டில் வைத்து மது விற்பனை செய்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனை அங்கு விரைந்த போலீசார், அவரது வீட்டில் சோதனை மேற்கொண்டனர். அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 3 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஆயிரத்து 668 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதனை அடுத்து பாண்டியை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Discussion about this post