திண்டுக்கல் மக்களவைத் தொகுதி அமமுக வேட்பாளருக்கு தேர்தல் விதிகளை மீறி சாலையில் பட்டாசு வெடித்து வரவேற்றதால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்பட்டது.
திருச்சியில் இருந்து திண்டுக்கல் வருகை தந்த வேட்பாளர் ஜோதிமுருகனை சீலப்பாடி பைபாஸ் அருகில் அமமுக மற்றும் எஸ்டிபிஐ கட்சியினர் வரவேற்றனர். அப்போது தேர்தல் நடத்தை விதிகளை மீறி கட்சிக் கொடிகளை எடுத்து வந்த அமமுகவினர்சாலையிலேயே பட்டாசுகளை வெடித்தனர்.இதனால் பெரும் அவதியடைந்த பொதுமக்கள் தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்தனர்.
Discussion about this post