பொள்ளாச்சியில், மாரியம்மன் கோவில் தேர்த் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. வெள்ளித் தேரில், வீதி உலா வந்த அம்மனை ஆயிரக்கணக்கான பக்தர்கள் பரவசத்துடன் வழிபட்டனர்.
பொள்ளாச்சி நகரில் அமைந்துள்ள பழமைவாய்ந்த மாரியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இக்கோவிலில், ஆண்டுதோறும் மாசி மாதம் திருவிழா கொண்டாடப்படுகிறது. அதன்படி, இந்த ஆண்டுக்கான திருவிழா, கடந்த 12ம் தேதி நோன்பு சாட்டுதலுடன் தொடங்கியது. முக்கிய நிகழ்வான அம்மன் வெள்ளித் தேரில், திருவீதியில் வலம் வரும் நிகழ்வு, புதன் கிழமை வெகு விமர்சையாக நடைபெற்றது. தமிழகத்தில் வேறு எங்கும் இல்லாத வகையில், 21 அடி உயரம் கொண்ட வெள்ளித் தேரில், மழை மாரி பொழிந்து விவசாயம் செழிக்க, அம்மனுக்கு நீல நிறப் பட்டுடுத்தி, மக்கள் வெள்ளத்தில், விநாயகர் தேர் முன்னே செல்ல, நாதஸ்வர மேளதாளம் முழங்க, ஏராளமான மக்கள் தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர்.
Discussion about this post