அம்மா உணவகங்களில் தரமற்ற உணவுப் பொருட்கள் வழங்கப்படுவதால் வாடிக்கையாளர்கள் குறைந்துள்ளார்கள் என்று சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளார்.
கடந்த 2012 ஆம் ஆண்டு புரட்சித் தலைவி ஜெயலலிதா அவர்கள் ஏழை எளிய மக்கள் பயன்படும் வகையில் குறைந்த விலையில் சத்தான உணவுகளை மக்களுக்கு வழங்க வழிவகை செய்து அம்மா உணவகத்தினை திறந்து வைத்தார். இதனால் அனைவரும் பயனடைந்தனர். இந்த திட்டத்திற்காக சரியான நிதியினை அதிமுக ஆட்சி வழங்கி இந்த உணவகத்தினை நன்றாக பராமரித்து வந்தது. ஆனால் திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற இந்த இரண்டு ஆண்டுகளாக அம்மா உணவகத்திற்கான நிதி ஒதுக்கீட்டினைக் குறைத்துள்ளது. மேலும் தரமற்ற பொருட்கள் கொண்டு உணவு தயாரிக்கப்படுகிறது. குறிப்பாக அரிசி பருப்பு போன்ற அத்தியாவசியப் பொருட்களின் தரமானது குறைக்கப்பட்டுள்ளது. இதனால் அம்மா உணவகத்திற்கு வந்து உணவு உண்ணும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. எனவே வாடிக்கையாளர்களை அதிகப்படுத்த வேண்டும் என்றும் அம்மா உணவகத்திற்கு சரியான நிதியை ஒதுக்கி உணவின் தரத்தினை மேம்படுத்த வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் சட்டசபையில் வலியுறுத்தினார்.
Discussion about this post