மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெ ஜெயலலிதா அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.இதை ஒட்டி உலகம் முழுவதும் அம்மாவின் உருவப்படத்திற்கு அதிமுக தொண்டர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர்.
இவ்வுலகை விட்டு அம்மாவின் ஆத்மா பிரிந்தாலும், அவரின் நினைவு எங்களுடன் தான் இருக்கிறது என்று மக்கள் அனைவரும் நிரூபித்துக் காட்டியுள்ளனர்.
ஆம்.அம்மாவின் நினைவு தினமான இன்று ட்விட்டரில் உலக அளவில் அம்மா ஹேஸ்டேக் ட்ரெண்டாகி வருகிறது.amma forever, jayalalitha,Amma,wemissyou Amma இப்படி உலக அளவில் ட்ரெண்டாகும் ஹேஸ்டேக் மூலம் அம்மாவின் நினைவுகளை இன்றளவும் யாரும் மறக்கவில்லை என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.