உலகமறிந்த கதாநாயகனாக இன்று அமிதாப் பச்சன் அறியப்படலாம். ஆனால், எல்லோர் வாழ்க்கையிலும் எற்படுவதைப் போலவே, அமிதாப் பச்சனின் வாழ்க்கையில் ஒரு நிகழ்வு நடந்துதான் அவரது வெற்றிப்பயணத்து விதை வீரியமாக வெளிக்கிளம்பியது. அந்த சம்பவம் நடந்த தினம் இன்று.
1970- களின் துவக்கத்தில் டாப் ஸ்டார்களாக மின்னிய ராஜேஷ் கன்னா, சசிகபூர், தேவ் ஆனந்த், தர்மேந்தி ரா எனப் பலரும் வேண்டாமென்று நிராகரித்த போலீஸ் இன்ஸ்பெக்டர் வேடம் அது. தந்தையை கொன்றவனை மகன் பழிவாங்கும் சங்ககாலத்துக் கதை.
தயாரிப்பாளரும் டைரக்டருமான பிரகாஷ் மெஹ்ரா வேறு வழியில்லாமல்தான் நடமாடும் லைட் அவுஸ் அமிதாபை ஹீரோவாக தேர்வு செய்கிறார். மும்பையில் படம் வெளியான அன்று, தியேட்டர்கள் ஈயோட்டின. டைரக்டரும், ஹீரோவும் மஆனால் நாலைந்து நாட்களில் திடீர் திருப்பம் ஏற்பட்டு படம் தாறுமாறாக ஓட ஆரம்பித்தது. ஆங்ரி யெங் மேன் என்ற பெயரை பெற்று ராக்கெட்டில் ஏற்றிவிட்டது. அந்த சஞ்சீர் படம் மூலம் மெகா ஹிட் கிடைத்து ஷோலே படத்தால் இந்தி திரையுலகின் சூப்பர்ஸ்டார் பட்டத்தையே ராஜேஷ் கண்ணாவிடமிருந்து அமிதாப் தட்டிப்பறித்துவிட்டார்.
இதே சஞ்சீர் படத்தை எம்ஜிஆர் நடித்து சிரித்து வாழ வேண்டும் என்று 1974ல் எடுத்தார்கள். நம்ம ஆனந்த விகடன் ஆசிரியர் பாலசுப்ரமணியம்தான் டைரக்டர். அது ஒரு மகா கொடுமை.
ஒரிஜினல் இளைஞர் அமிதாப் செய்த சஞ்சீர் ஆங்கிரி யங்மேன் பாத்திரத்தை 57 வயதான எம்ஜிஆரால் தொட முடியவில்லை. அத்தோடு இந்தியில் நடிகர் பிரான் கலக்கி எடுத்த சூதாட்ட கிளப் ஓனர் ரோலையும் எம்ஜிஆர் தனக்காக போட்டுக் கொண்டு இரட்டை வேடமாக்கியது இன்னொரு தமாஷ். சிரித்து வாழவேண்டும் 100 நாட்கள் ஓடிய படமென்றாலும் எம்ஜிஆர் படங்களில் அது ஒரு துன்பியல் சம்பவம் என்றுதான் சொல்ப்படுகிறது. பல மொழிகளிலும் சஞ்சீர் ரீமேக் செய்யப்பட்டாலும் நோ ஒன் கேன் டச்.. தி ஹேங்ரி யங்மேன்.. தி ஒரிஜினல்