இயற்கை சீற்றத்தை திறைமையாக கையாளும் வகையில் செயல்பட வேண்டும்: அமித் ஷா

மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம், தீயணைப்புத் துறை, பாதுகாப்புத்துறை, உள்துறை அதிகாரிகளுக்கான இரண்டு நாள் மாநாடு உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் டெல்லியில் நடைபெற்றது.

எஸ்.டி.ஆர்.எஃப், பாதுகாப்புத்துறை, தீயணைப்புத்துறை உள்ளிட்ட துறைகளின் பிரச்சனைகள் மற்றும் தேவைகள் குறித்து ஆய்வு செய்ய இரண்டு நாட்கள் மாநாடு டெல்லியில் நடைபெற்று வருகிறது. முதல் நாளான இன்று உள்துறை அமைச்சர் அமித் ஷா மாநாட்டை தொடங்கி வைத்து பேசினார்.

எந்த ஒரு இயற்கை சீற்றத்தையும் கையாளும் வகையில் மத்திய அரசின் ஒவ்வொரு படையும் துரிதமாக செயல்பட வேண்டும் என கேட்டுக் கொண்ட அவர், நாட்டின் கட்டமைப்பிற்கு பெரும் பங்கு வகிக்கும் வீரர்களின் சேவை எந்த தடங்கலும் இல்லாத வகையில் தொடர வேண்டும் என்றார். பேரிடர் படை வீரர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் எனவும் அமித் ஷா உறுதி அளித்தார்.

Exit mobile version