மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகளுடன் அமித் ஷா ஆலோசனை

உள்துறை அமைச்சக உயர் அதிகாரிகளுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நடத்தி வரும் ஆலோசனை கூட்டத்தில் ஜம்மு காஷ்மீர் ஆளுநரும் பங்கேற்றிருப்பது முக்கியத்துவம் வாய்ந்தததாக கருதப்படுகிறது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் உள்துறை அமைச்சராக இருக்கும் அமித் ஷா, இன்று தனது பொறுப்பை ஏற்றுக்கொண்டார். இதனையடுத்து உள்துறை அமைச்சகத்தின் உயர் அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டத்திற்கு அவர், அழைப்பு விடுத்தார்.

டெல்லியில் உள்ள மத்திய உள்துறை அமைச்சக அலுவலகத்தில் நடைபெற்று வரும் இந்த ஆலோசனை கூட்டத்தில், உயர் அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். இந்தநிலையில், ஆலோசனைக் கூட்டத்தில் ஜம்மு காஷ்மீர் மாநில ஆளுநர் சத்ய பால் மாலிக்கும் பங்கேற்று இருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில், கடந்த டிசம்பர் 20 ஆம் தேதி முதல் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலில் இருக்கும் நிலையில், மத்திய உள்துறை அமைச்சருடனான ஆலோசனை கூட்டத்தில் ஆளுநர் சத்ய பால் மாலிக் பங்கேற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. 

Exit mobile version