மதுரையில் பா.ஜ.க நிர்வாகிகளுடன் அமித் ஷா ஆலோசனை

தமிழகம் வந்துள்ள பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா, மதுரையில் கட்சி நிர்வாகிகளுடன் மக்களவைத் தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தினார்.

தனி விமானம் மூலம், காலை மதுரை விமான நிலையம் வந்தடைந்தார். பின்னர் அருப்புக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் தனியார் கல்லூரியில் நடைபெற்ற பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் அவர் பங்கேற்றார். மதுரை மண்டலம், கொங்கு மண்டலம், மத்திய மண்டல பாஜக நிர்வாகிகளுடன் கலந்துரையாடிய அவர், மக்களவை தேர்தல் பணிகள் குறித்து எடுத்துரைத்தார். கூட்டத்தில், பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், மாநிலங்களவை உறுப்பினர் இல.கணேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

Exit mobile version