ஜி20 மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஜப்பான் சென்றுள்ள இந்திய பிரதமர் மோடி மற்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆகியோர் சந்தித்து முக்கிய விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
ஒசாகாவில் நடைபெறும் ஜி20 மாநாட்டில் கலந்துகொள்ள ஜப்பான் சென்றுள்ள இந்திய பிரதமர் மோடி மற்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆகியோர் இடையேயான இருதரப்பு சந்திப்பு நடைபெற்றது. சந்திப்பின்போது மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய் சங்கரும் உடன் இருந்தார். இந்த சந்திப்பின்போது ஈரான் விவகாரம், 5ஜி தொழில்நுட்பம், இரு நாடுகளுக்கு இடையேயான உறவு மற்றும் பாதுகாப்பு ஆகிய முக்கிய விவகாரங்கள் தொடர்பாக டிரம்புடன் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது பேசிய டிரம்ப், இந்தியாவும் அமெரிக்காவும் சிறந்த நண்பர்கள் என்றும் ராணுவம் உட்பட பல்வேறு விவகாரங்களில் இரு நாடுகளும் இணைந்து செயல்படும் என்றும் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, இந்தியாவின் நலன் விரும்பும் நாடுகளில் அமெரிக்காவுக்கு முக்கிய இடம் உள்ளதாவும் குறிப்பிட்டார்.
Discussion about this post