அமெரிக்காவில் பறந்த சீன பலூனை அமெரிக்க ராணுவம் சுட்டு வீழ்த்தியதை அடுத்து ராணுவ வீரர்களுக்கு அதிபர் ஜோபைடன் பாராட்டு தெரிவித்துள்ளார்.
அமெரிக்க வான்பரப்பில் சீனாவின் உளவு பலூன் ஒன்று பறந்ததாக சொல்லப்பட்டது. அதனைத் தொடர்ந்து அட்லாண்டிக் கடல் பகுதியில் அந்த பலூனை சுட்டு வீழ்த்தப்பட்டதாக பென்டகன் தெரிவித்தது. அமெரிக்காவின் மொண்டானா மாகாணத்தில் உள்ள அணு ஆயுத ஏவுதலத்தின் மீது சீனாவின் ராட்சச உளவு பலூன் ஒன்று பறந்ததாக கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் பரபரப்பான தகவல் வெளியானது. இந்த பலூனை சுட்டு வீழ்த்தினால் ஏதாவது பிரச்சனை வருமா என்று ஆய்வு செய்யப்பட்டது. அதனை அடுத்து பலூனை சுட்டு வீழ்த்த முடிவு செய்யப்பட்டதை அடுத்து பென்டகன் அந்த பலூனை சுட்டு வீழ்த்தியது.
இதனால் இந்த சீன பலூனை சுட்டு வீழ்த்தியதற்காக அதிபர் ஜோபைடன் பாராட்டுகளை தெரிவித்துள்ளார். மேலும் சீனாவுக்கு அமெரிக்காவின் தரப்பிலிருந்து கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.