சென்னை மாநகரின் குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்கும் வகையில் 24 மணி நேரமும் தண்ணீர் லாரிகளை இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு.
சென்னை மாநகருக்கு குடிநீர் வழங்கும் முக்கிய நீராதரங்களான சோழவரம் ஏரி முற்றிலுமாக வறண்டுள்ளது. பூண்டி, செம்பரம்பாக்கம் ஏரிகளில் சொற்ப அளவு நீரே எஞ்சி உள்ளன. கோடைகால குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க வீராணம் ஏரி கை கொடுத்து வருகிறது. சென்னைக்கு வெளியே உள்ள கல் குவாரிகள் மற்றும் தனியார் விவசாய நிலங்களில் இருந்து தண்ணீரை எடுத்து பொதுமக்களுக்கு வழங்க குடிநீர் வாரியம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதுவரை சென்னை மாநகரில் தண்ணீர் லாரிகளை இயக்க காலை 8.30 மணி முதல் 11.30 மணி வரையும், மாலை 4.30 மணியிலிருந்து 9 மணி வரை அனுமதி வழங்கப்பட்டு இருந்தது. இந்தநிலையில் சென்னை குடிநீர் வழங்கல் வாரியம் மற்றும் ரயில்வே நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு துறைகள் உடைய கோரிக்கையை ஏற்று சென்னை மாநகர போக்குவரத்துக் காவல்துறை, 24 மணி நேரமும் தண்ணீர் லாரிகள் மூலம் தண்ணீர் விநியோகம் செய்ய அனுமதி அளித்துள்ளது. மேலும் குடிநீர் லாரிகளால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதை தடுக்கும் விதமாக பல்வேறு கட்டுப்பாடுகளை சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை விதித்துள்ளது.
அதன்படி, சென்னை மாநகரில் தண்ணீர் கொண்டு செல்லக்கூடிய லாரிகள் அனுமதிக்கப்பட்ட வேகத்திலேயே இயக்க வேண்டும். அதிக வேகத்தில் இயக்க கூடாது. லாரிகளில் பிரேக் சரியாக இருக்கிறதா என்பதை ஓட்டுநர் தினந்தோறும் சரிபார்த்த பிறகே வாகனங்களை இயக்க வேண்டும். இதேபோல் முறையான லைசென்ஸ் வைத்திருப்பவர் மட்டுமே தண்ணீர் லாரிகளை இயக்க வேண்டும். மது போதையில் வாகனங்களை இயக்கினால் உரிமையாளர் மற்றும் ஓட்டுநர் மீது நடவடிக்கை எடுக்கப்படுவது மட்டுமின்றி தண்ணீர் லாரிகளை இயக்க தடை விதிக்கப்படும் தண்ணீர் லாரிகள் சாலை விதிகளை முழுமையாக பின்பற்ற வேண்டும். லாரி உரிமையாளர் சாலை விதிகளை பின்பற்றுவது குறித்து ஓட்டுநர்களுக்கு ஆலோசனை வழங்க வேண்டும். விபத்து ஏற்படுத்தினால் தண்ணீர் லாரிகளை இயக்க வழங்கப்பட்ட அனுமதி ரத்து செய்யப்படும்.
தண்ணீர் லாரியில் மூலமாக போக்குவரத்து விபத்து ஏற்படுத்தினால் அதற்கு லாரி உரிமையாளர் ஓட்டுனரும் பொறுப்பு பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லாமல் பாதுகாப்பாக தண்ணீர் லாரிகளை இயக்க வேண்டும் என்று பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
Discussion about this post