நீலகிரி மாவட்டத்தில் அனைத்து சுற்றுலாத் தலங்களும் இன்று முதல் திறக்கப்படுவதால் சுற்றுலா பயணிகளும், வியாபாரிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக, அனைத்து சுற்றுலா தலங்களும் மூடப்பட்டன. இதனையடுத்து ஊரடங்கு தளர்வாக, தோட்டக்கலைத் துறையின் கீழ் உள்ள ஊட்டி தாவிரவியல் பூங்கா, சிம்ஸ் பூங்கா உட்பட 4 பூங்காக்கள் மட்டும் கடந்த செப்டம்பர் மாதம் சுற்றுலா பயணிகளின் பார்வைக்காக திறக்கப்பட்டது. இந்நிலையில் 8 மாதங்களுக்கு பிறகு தொட்டபெட்டா சிகரம், படகு இல்லம், பைகாரா நீர்வீழ்ச்சி உள்ளிட்ட அனைத்து சுற்றுலா தலங்களும் இன்று முதல் சுற்றுலா பயணிகளின் பார்வைக்காக திறக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகளும் அப்பகுதி வியாபாரிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதனிடையே வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள முதுமலை புலிகள் காப்பகம் மட்டும் சுற்றுலா பயணிகளின் பார்வைக்கு திறக்கப்படாமல் தடை நீடிக்கிறது.
Discussion about this post