நியாய விலை கடைகளில் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும்- சென்னை உயர்நீதிமன்றம்

தமிழகம் முழுவதும் உள்ள நியாய விலை கடைகளில் சிசிடிவி கேமரா பொருத்துவது குறித்து இரண்டு வாரத்திற்குள் அரசுக்கு பரிந்துரை அளிக்க கூட்டுறவு துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை அபிராமபுரத்தில் உள்ள ரேஷன் கடையில், 2010 ம் ஆண்டு கூட்டுறவுத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.

அப்போது, ரேசன் பொருட்கள் கள்ளத்தனமாக விற்கப்படுவதை கண்டுபிடித்த அதிகாரிகள், அங்கு பணியாற்றிய கீதா என்ற ஊழியரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டனர்.

இதை எதிர்த்து கீதா தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நியாய விலை கடைகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவது குறித்து கூட்டுறவு துறை, 2 வார காலங்களுக்குள் அரசுக்கு பரிந்துரை அனுப்ப வேண்டும் என்றும், அந்த பரிந்துரையை செயல்படுத்துவது குறித்து ஜனவரி 10-ம் தேதிக்குள் அரசு பதிலளிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Exit mobile version