கிருஷ்ணகிரியில் அரசின் 27வது அகில இந்திய மாங்கனி கண்காட்சி தொடங்கியது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 40 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில், மா சாகுபடி செய்யப்படுகிறது. இங்கு விளையும், மா வகைகள் மற்றும் மாங்கூழ் ஆகியவை பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்த நிலையில், மா விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில், ஒவ்வொரு ஆண்டும், கிருஷ்ணகிரியில் அகில இந்திய மாங்கனி கண்காட்சி நடத்தப்படுவது வழக்கம். இதில், விவசாயிகள் தாங்கள் சாகுபடி செய்த, மா வகைகளை கண்காட்சியில் மக்கள் பார்வைக்கு வைக்கின்றனர். அதில், தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த மா வகைகளுக்கு, பரிசு வழங்கப்படுகிறது. அதன்படி, இந்த ஆண்டுக்கான, 27வது அகில இந்திய மாங்கனி கண்காட்சி ஞாயிறன்று தொடங்கியது. இதனை பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட வருவாய் அலுவலர் ஆகியோர் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தனர்.
Discussion about this post