1879 ஆம் ஆண்டு ஜெர்மனியில் உள்ள உல்ம் என்கிற பகுதியில் மார்ச் 14 ஆம் தேதி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் பிறந்தார். பிறப்பால் ஒரு யூதக் குடும்பத்தைச் சேர்ந்தவராக இருந்த இவர் இயற்பியலில் கோலோச்சித் திகழ்ந்தார். தன்னுடைய பி.எச்டி பட்டத்தை தற்போதைய வட சுவிட்சர்லாந்தில் உள்ள சூரிச் பல்கலைகழகத்தில் 1905 ல் பயின்றார். சில வருட ஆராய்ச்சிக்கு பிறகு ஈர்ப்புவிசையின் GENERAL RELATIVITY theory என்கிற தன்னுடியை உலக புகழ்பெற்ற ஆய்வை வெளியிட்டார். இவரது கண்டுபிடிப்பில் மிகவும் முக்கியமாக சொல்லப்படுவது law of the photoelectric effect என்பதாகும். இதுதான் பிற்காலத்தில் குவாண்டம் தியரியை உருவாக்க காரணமாக அமைந்தது.
இவரின் நினைவாக 2005 ஆம் ஆண்டை உலக இயற்பியல் ஆண்டாக கொண்டாடினர். அதற்கு காரணம் இவர் 1905ல் சமர்பித்த ஆய்வுக்கட்டுரைகளின் நூற்றாண்டை நினைவுப்படுத்தும் பொருட்டு ஆகும். 1921 ஆம் ஆண்டு ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் இயற்பியலுக்கான நோபல் பரிசினைப் பெற்றார். இவரை மறப்பினும் இவரது சூத்திரத்தை நம்மவர்கள் மறக்கமாட்டார்கள். அதுதான் E = mc^2 என்கிற சூத்திரம்.
மானுட சமூகத்தின் முக்கியமான விஞ்ஞானியான ஐன்ஸ்டீனின் சில பொன்மொழிகள்
நம்மை சீர்குலைக்கக்கூடிய புகழ்ச்சியில் இருந்து விடுபட ஒரே வழி, மீண்டும் உழைக்கச் செல்வதுதான்.
உண்மைகள் தோற்றங்களுடன் பொருந்தவில்லை என்றால் உண்மைகளை மாற்றுங்கள்.
கடவுளின் முன் நாமனைவரும் சம அளவில் புத்திசாலிகள்/முட்டாள்கள்.
வெற்றிபெற்ற மனிதராக முயற்சிப்பதை விட, மதிப்பு மிக்க மனிதராக முயற்சி செய்யுங்கள்.
அறிவாற்றலைவிட கற்பனைத்திறன் மிகவும் முக்கியமானது. அறிவாற்றலுக்கு எல்லையுண்டு, ஆனால் கற்பனைத் திறனுக்கு எல்லையே கிடையாது.
வாழ்க்கை என்பது ஒரு மிதிவண்டியை ஓட்டுவது போலத்தான். விழாமல் இருக்க வேண்டுமென்றால், நிற்காமல், நகர்ந்துகொண்டே இருக்க வேண்டும்.
புத்திசாலி பிரச்சனைகளைத் தீர்ப்பான். ஞானமுள்ளவன் பிரச்சனைகளை அண்டவிடமாட்டான்.
தவறு செய்பவர்களை விட. அதனை வேடிக்கைப் பார்ப்பவர்களே மிகவும் கொடுமையானவர்கள்.
ஆசிரியரைப் பொறுத்தவரை நான் முட்டாள். உங்களைப் பொறுத்தவரை நான் அறிவாளி. என்னைப் பொறுத்தவரை நான் யாரென்று தேடிக்கொண்டிருக்கிறேன். சரியாக புரியவில்லை.
வாழ்க்கையில் தவறே செய்யாதவர்கள், வாழ்க்கையில் புதிதாக எதனையும் முயற்சிக்காதவர்களாகதான் இருப்பார்கள்.