காவிரி மேலாண்மை ஆணையத்தின் புதிய தலைவராக ஏ.கே சின்ஹாவை நியமித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன் மத்திய நீர்வள ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்ட நிலையில், தற்போது காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவராகவும் ஏ.கே சின்ஹா நியமிக்கப்பட்டுள்ளார். பிரதமர் மோடி தலைமையிலான நியமன குழு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. கடந்த 1983 ஆம் ஆண்டு மத்திய நீர்வள ஆணையத்தின் நீர்பாசனப் பொறியாளராக பணியில் சேர்ந்த அவர், நீர்வளத்துறையில் நீண்ட அனுபவமும், நீர் சார்ந்த விஷயங்களில் நிபுணத்துவமும் பெற்றவர்.
ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் தமிழகத்திற்கு தர வேண்டிய காவிரி நீர் இதுவரை திறந்துவிடப்படாத சூழலில் காவிரி மேலாண்மை ஆணைய தலைவராக ஏ.கே சின்ஹா நியமிக்கப்பட்டுள்ளது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.