விஸ்வாசம் படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் அஜித்குமார் தனது அடுத்த படத்தை தீரன் பட இயக்குனர் வினோத் உடன் கைகோர்த்து உள்ளார். இந்நிலையில் இத்திரைப்படத்துக்கு கதாநாயகி யார் என்று குழப்பம் நிலவி வந்த நிலையில் முதலில் இப்படத்தில் டாப்ஸி நடித்த கேரக்டரில் நடிகை நஸ்ரியா நடிப்பார் என்ற தகவல் வெளியாகியது. திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து விலகி இருந்த நஸ்ரியா மீண்டும் இப்படத்தின் மூலம் ரீ-எண்ட்ரி கொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது இப்படத்தில் நஸ்ரியா நடிக்கவில்லை என்று அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கு பதில் விக்ரம் வேதா பட கதாநாயகி “ஷரதா ஸ்ரீநாத்” நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தற்சமயம் பெயரிடப்படாத இப்படத்தை #AK59 என்ற பெயரில் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். பாலிவுட் படமான பிங்க் படத்தின் ரீமேக்கான இப்படம் தமிழில் மே 1 ஆம் தேதி வெளியிட உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது . இந்த படத்தில் அமிதாப்பச்சன் நடித்த கதாபாத்திரத்தை அஜித் ஏற்று நடிக்க உள்ளார். இந்த திரைப்படம் அஜித்துக்கு மீண்டும் நல்ல வெற்றியை தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Discussion about this post