இந்திய விமானப்படையின் துணை ஏர் மார்ஷல் பதோரியா பிரான்சுக்கு சொந்தமான ரஃபேல் விமானத்தை இயக்கி சோதனை செய்தார்.
இந்தியா மற்றும் பிரான்சு நாடுகளின் விமானப்படைகள் இணைந்து கருடா 4 என்ற பெயரில் மிகப்பெரிய கூட்டு ராணுவப் பயிற்சியை நடத்தின. பிரான்சின் மாண்டி மார்சன் விமானப்படை தளத்தில் கடந்த இரண்டு வாரங்களாக நடைபெற்ற இந்த கூட்டுப் பயிற்சியில் இந்திய விமானப்படையைச் சேர்ந்த சுகோய், மீராஜ், உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட விமானங்களும், பிரான்சு நாட்டின் ரஃபேல், மீராஜ் உள்ளிட்ட விமானங்களும் பங்கேற்றன. பல்வேறு போர் ஒத்திகைகளில் கடந்த இரண்டு வாரங்களாக ஈடுபட்ட வந்த நிலையில் இந்திய விமானப்படையின் துணை ஏர் மார்ஷல் பதோரியா பிரான்சுக்கு சொந்தமான ரஃபேல் விமானத்தில் பறந்து சோதனை செய்தார். ஆகஸ்ட் மாதம் இந்தியாவுக்கு இரண்டு ரஃபேல் விமானங்கள் வருகை தரவுள்ளதாக கூறப்படும் நிலையில் இந்திய விமானப்படையினர் சோதனை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.