மக்களவைத் தேர்தலுக்கு தயாராகும் அதிமுக..!
அடுத்தாண்டு நடைபெற உள்ள மக்களவை தேர்தலுக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தயாராகி வருவதாக தெரிவித்துள்ளார் அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்கள். மேலும் 2018ல் பழைய உறுப்பினர் பதுப்பிக்கப்பட்டதோடு, புதிய உறுப்பினர்களும் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், தற்போதும் 5 ஆண்டுக்குப் பிறகு மீண்டும் அதேபோன்ற பணிகள் நடப்பதாகவும் தெரிவித்திருக்கும் அவர், இன்றைக்கு அதிமுகவில் 1.60 கோடி உறுப்பினர்கள் சேர்ந்திருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.
மாபெரும் மதுரை மாநாடு…!
மேலும் பூத் கமிட்டி, பாசறைகள் எல்லாம் அமைக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்திருக்கும் எடப்பாடி கே.பழனிச்சாமி, ஆகஸ்ட் 20ம் தேதி மதுரையில் அதிமுக சார்பில் பிரம்மாண்ட மாநாடும் நடைபெறும் என்று அறிவித்திருக்கிறார். ஓராண்டுக்கு முன்பாகவே தேர்தலுக்கு அதிமுக தயாராகி வரும் நிலையில், மதுரை மாநாடு மக்களின் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்றொரு கேள்வி தற்போது எழுந்துள்ளது. விடியா திமுக அரசின் இரண்டாண்டு ஆட்சிக் காலத்தில் சொல்ல முடியாத அளவுக்கு கஷ்டங்களை சந்தித்து வரும் மக்கள், எப்போது தான் நமக்கு உண்மையான விடியல் ஏற்படும் என்று ஏங்கிக் கொண்டு இருக்கிறார்கள். மக்களின் நம்பிக்கையை பெறும் விதமாக அதிமுகவும், மக்கள் நலன் சார்ந்த பிரச்சனைகளுக்கு தொடர்ந்து குரல் எழுப்பி வருகிறது.
திமுகவினைக் கண்டிக்கும் அதிமுக…!
விலைவாசி உயர்வு, மின் கட்டண உயர்வு முதல் பல்வேறு வரிகள் உயர்வு வரை திமுகவை கண்டித்து ஆர்ப்பாட்டங்களும், போராட்டங்களும் அதிமுக சார்பில் மாவட்ட வாரியாக நடத்தப்பட்டிருக்கின்றன. இவற்றில் எல்லாம் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்துக்கொண்டு, உண்மையான விடியலை அதிமுக தான் தரும் என்கிற நம்பிக்கையில் திமுகவுக்கு எதிரான முழக்கங்களையும் முன்வைத்திருக்கிறார்கள். தேசிய அரசியலில் கால் பதித்துவிடலாம், எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்துவிடலாம், அதனால் நம்முடைய பெயரும் தேசிய ஊடகங்களில் அடிக்கடி பேசப்படும் என்கிற ஆர்வத்தில் ஏதேதோ செய்துக்கொண்டிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.
திமுகவிற்கு முடிவெழுதப்போகும் தேர்தல்…!
இதற்கு நடுவே சத்தமே இல்லாமல் நாடாளுமன்ற தேர்தலுக்கான பூர்வாங்க பணிகளை தொடங்கியிருக்கிறது அண்ணா திமுக. 2011ம் ஆண்டு திமுக ஆட்சி மாற்றம் ஏற்படுவதற்கு காரணமாக அமைந்தது அதிமுகவின் கோவை மாநாடு. அதேபோல இந்த விடியா திமுக அரசுக்கு முடிவுரை எழுதும் வகையில் அதிமுகவின் மதுரை மாநாடு அமையும் என்று அதிமுக தொண்டர்களும், பொதுமக்களும் எதிர்பார்க்கிறார்கள். விடியா திமுக அரசுக்கு முடிவுரை எழுத அதிமுகவால் மட்டும் தான் முடியும் என்று நம்பும் பொதுமக்கள், அதற்கான நேரத்திற்காக காத்துக்கொண்டும் இருக்கிறார்கள் என்று சொன்னால் மிகையாகாது.