ரூம் போட்டு எப்படி ஊழல் செய்யலாம் என்று யோசிப்பவர் செந்தில்பாலாஜி – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்!

முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி :

எடப்பாடி தலைமையில் அதிமுக நிர்வாகிகள் அனைவரும் ஆளுநர் சந்தித்து மனு அளிக்க உள்ளனர், முக்கியமாக கள்ள சாராயம் அருந்தி உயிரிழந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தமிழகத்தில் அனேக இடத்தில் கள்ள சாராயம் விற்பதும் சட்ட ஒழுங்கு பிரச்சினை முறைகேடுகளை குறித்தும் வருகின்ற 22 ஆம் தேதி பேரணையாக சென்று ஆளுநரை சந்தித்து மனு அளிக்க திட்டமிட்டுள்ளோம்.

ஆகையால் இது குறித்து தெரிவித்து ஒப்புதல் பெற்று, நாங்கள் நடத்தும் பேரணிக்கு பாதுகாப்பு அளிக்க கோரிக்கை வைத்து காவல் ஆணையரை சந்தித்து மனு அளித்து வந்தோம், சாராயம் மிக சுலபமாக தமிழ்நாட்டில் விற்கப்படுகிறது இதனால் முதலமைச்சர்ரூம் அமைச்சர் செந்தில் பாலாஜி ராஜினாமா செய்ய வேண்டும் , டாஸ்மாக் கடைகளில் ஒவ்வொரு பாட்டிலிலும் கூடுதலான விலையில் விற்கப்படுகிறது என்று செய்தியாளர்கள் கேட்கும் பொழுது அதை பொய்யானது என்று செந்தில் பாலாஜி அப்பட்டமாக பொய் கூறுகிறார்,

நீதிமன்றத்தில் மதுபான பார்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை ஆனால் எல்லா இடகளிலும் இன்று பார் நடைபெற்று வருகிறது, கள்ளச்சாராயம் மரணங்கள் ஒரு பக்கம் இருக்க நேற்று செங்கல்பட்டில் செங்கல்பட்டு மாவட்டத்தில் அரசு மதுபானத்தை குடித்து ஒருவர் இறந்து விடுகிறார் ஆனால் இவர்கள் மீது தவறு இல்லை என்று கூறுகிறார்கள், மதுபானம் அருந்து விழுந்து இருந்திருக்கிறார் என்றால் டாஸ்மார்க் மதுபானத்தில் பிரச்சனை இருக்கிறது என்று சந்தேகம் வாருமா இல்லையா.

ரூம் போட்டு ஊழல் எப்படி செய்யலாம் என்று யோசிக்கும் அமைச்சர் எப்படி மின் வளத்தை ஒழுங்காக பார்த்துக் கொள்வார், அடிக்கடி மின்வெட்டு பிரச்சினை குறித்து எப்படி பேசுவார், மின்சாரம் என்பது 24 மணி நேரமும் மக்களுக்கு கிடைக்க வேண்டும், கை சுத்தமான ஆட்கள் துறையில் இருந்தால் இந்த தட்டுப்பாடும் ஏற்படாமல் இருக்கும்,

கள்ள சாராயத்தின் ஒழிக்க முன்கூட்டியே நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த உயிர் பலி நடந்திருக்காது, இந்த அரசு போதையில் தள்ளாடும் அரசு ஆகையால் ஒரு நிலையான செயல்கள் கிடையாது, முதலில் மதுவுக்கு எதிராக அனைவரும் போராட்டத்தில் நடத்தினார்கள் ஆனால் அவர்கள் செய்தார்களா, எங்கள் ஆட்சியில் மது கடையை படிப்படியாக மூடவும் என தான் கூறினோம் ஆனால் உடனடியாக உருவதி குறித்து நாங்கள் பேசவில்லை, திமுக தான் மொத்தமாக மூடும் என கூறினார்கள் ஆனால் செய்தீர்களா, மக்களை அனைவரையும் குடிக்க வைத்து நாங்கள் செய்யும் ஊழல்களையும் நாங்கள் ஜனநாயக செய்யும் எதிரான செயலையும் குறித்து சிந்திக்காதீர்கள் என மக்களை குடிக்க வைத்துக் கொண்டிருக்கும் இந்த திமுக ஆட்சி தான், ஒரு சதவீதம் கீழ் தான் தேர்ச்சி விகிதம் அதிகமாகி இருக்கிறது இந்த ஆட்சியில் ஒன்றும் கல்வித்துறையில் ஏதும் சாதிப்பதாக அவர்கள் பேச முடியாது, தமிழில் யாரும் நூறு மார்க் எடுக்கவில்லை தமிழில் வளர்க்கிறோம் தமிழருக்காக இருக்கிறோம் என்று பேசுவார்கள் ஆனால் தமிழை வளர்ப்பதற்கு இவர்கள் ஒரு நடவடிக்கை எடுப்பது கிடையாது,

பதவி வெறி பிடித்து ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்து அவரைப் போன்று வெற்றி விடலாம் என்று நினைப்பவர்கள் நாங்கள் கிடையாது மக்களை நம்பி தான் நாங்கள் இருக்கிறோம், அவரது அரசியல் அந்தஸ்தை டிடிவி யாள் கூற முடியுமா,

டிடிவி போன்று பல தேர்தலை சந்தித்து தோல்வி அடைந்து பின்பு ஆர் கே நகர் தொகுதியில் 20 ரூபாய் நோட்டை கொடுத்து ஜெயித்து வந்தவர்கள் போல் நாங்கள் வரவில்லை, பணத்தை வைத்து நாங்கள் கட்சி நடத்தவில்லை, புரட்சித்தலைவர் மற்றும் ஜெயலலிதா அவர்களின் வழியில் நாங்கள் கட்சியை நடத்தி வருகிறோம், பதவிக்காக பல் இழுத்து விட்டு சுயமரியாதை இழந்து இருப்பவர்கள் நாங்கள் இல்லை,

1998 இல் ஒரத்த நாட்டில் முதல் முதலில் வைத்தியலிங்கத்தை அறிமுகம் செய்தவன் நான் அப்படி இருப்பவர் எடப்பாடி குறித்து தேவையில்லாமல் பேசி விடக்கூடாது,

திமுக வார்டு கவுன்சிலர்கள் எந்த வேலையும் பார்க்காமல் சிறு வியாபாரிகளை மிரட்டி மாமுள் வாங்குவதை தவிர மக்களுக்கான எந்த வேலையும் செய்வதில்லை, எங்களை பொறுத்தவரை அவர்களுக்கு எதிராக போராட முடியும் அதை தவிர வேலை பார்ப்பது ஆட்சி நடத்துபவர்களின் வேலை தான்.

உளவுத்துறை பொறுத்தவரை அவர்கள் சுட்டிக்காட்டும் குற்றங்களை திமுக அரசும் முதலமைச்சரும் கண்டுகொள்ளாமல் இருப்பதால்தான் மீண்டும் மீண்டும் குற்றங்கள் நடைபெற்று வருகிறது.

Exit mobile version