எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் அதிமுக பொதுச்செயலாளராக பதவியேற்றதினையொட்டி பல்வேறு தொண்டர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், அதிமுக நிர்வாகிகள் போன்றவர்கள் தொடர்ந்து வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். அதனையொட்டி தற்போது முன்னாள் அமைச்சரும், கழக அமைப்புச்செயலாளரான சி.விஜயபாஸ்கர் தலைமையில் 50 வகையான சீர்வரிசையுடன் புதுக்கோட்டை அதிமுக நிர்வாகிகள் வருகை புரிந்து, மேள தாளங்கள் முழங்க பொதுச்செயலாளர் எடப்பாடி கே பழனிசாமி அவர்களுக்கு சிறப்பு செய்து வாழ்த்துக்களை தெரிவித்தனர். சீர்வரிசையில் மா,பலா, வாழை மற்றும் அதிமுக சால்வையிலிருந்து பல விவசாயப் பொருட்கள் அடங்கியிருந்தன. இதனை பொதுச்செயலாளர் அவர்கள் இன்முகத்துடன் ஏற்று அனைவருக்கும் தனது நன்றியை உரித்தாக்கினார்.
50 வகையான சீர்வரிசை பொருட்களுடன் வந்து பொதுச்செயலாளரை வாழ்த்திய முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர்..!
