சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை திருவுருவச்சிலைக்கு அதிமுக பொதுச்செயலாளர் மாலை அணிவித்து மரியாதை!

சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் நினைவு தினத்தையொட்டி சென்னை கிண்டியில் உள்ள தீரன் சின்னமலையின் திருவுருவச்சிலைக்கு கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டிருக்கும் அவரின் திருவுருவப்படத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

விடுதலை போராட்ட வீரர் தீரன் சின்னமலை, ஈரோடு மாவட்டத்தில் உள்ள காங்கேயம் அருகில் மேலப்பாளையம் என்னும் சிற்றூரில் 1756 ஆம் ஆண்டு பிறந்தார். தீர்த்தகிரி என்னும் இயற்பெயர் கொண்டவர். இளம் வயதிலேயே போர்க்களையில் மிகவும்
சிறந்தவராக விளங்கினார். ஆங்கிலேயரின் கிழக்கு இந்திய கம்பெனி படையினரின் ஆதிக்கத்தை எதிர்த்து பல்வேறு போர்களிலும் ஈடுபட்டிருக்கிறார்.

1801 ஆம் ஆண்டு ஈரோடு காவிரி கரையிலும் 1802 ஆம் ஆண்டு ஓடாநிலையிலும் 1804 ஆம் ஆண்டு அரச்சலூரிலும் ஆங்கிலேயர்களோடு நடைபெற்ற போரில் பெரும் வெற்றி பெற்று இருக்கிறார். போரில் தீரன் சின்னமலையை வெல்ல முடியாத ஆங்கிலேயர்கள் சூழ்ச்சி மூலம் அவரை கைது செய்து சங்ககிரி கோட்டையில் 1805 ஆம் ஆண்டு ஆடி பதினெட்டாம் நாளில் தூக்கிலிட்டனர்.

இந்நிலையில் இன்று அவரின் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது அதனை ஒட்டி தற்பொழுது அதிமுக பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி சென்னை கிண்டியில் உள்ள தீரன் சின்னமலையின் திருவுருவச் சிலைக்கு கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டிருக்கும் அவரின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதனை தொடர்ந்து தீரன் சின்னமலையின் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதனை தொடர்ந்து அவை தலைவர் தமிழ்மகன் உசேன், மற்றும் மாவட்ட கழகச் செயலாளர்கள் மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினர்.

Exit mobile version