அதிமுக இனி இருக்காது என்று சொன்னவர்களின் முகத்தில் கரியை பூச வேண்டும் என விழுப்புரம்,கள்ளக்குறிச்சி வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் சட்டத்துறை அமைச்சர் சி.வி சண்முகம் வேண்டுகோள் விடுத்துள்ளார். தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி சார்பில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதிகளின் வேட்பாளர் அறிமுக கூட்டம் விழுப்புரம் கரும்பு விவசாயிகள் சங்கம் மண்டபத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், பா.ம.க நிறுவனர் ராமதாஸ, தேமுதிக துணை செயலாளர் சுதீஷ் உள்ளிட்டோர் கலந்து கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதி பா.ம.க வேட்பாளர் வடிவேல் ராவணன் மற்றும் கள்ளக்குறிச்சி தேமுதிக வேட்பாளர் சுதிஷ் ஆகியோர் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர். இந்தக் கூட்டத்தில் பேசிய அமைச்சர் சி.சி சண்முகம், தேர்தலுக்கு பின்னர் மாநில கட்சிகளின் உதவியின்றி மத்தியில் ஆட்சி அமையாது என்றார்.
நிகழ்ச்சியில் பேசிய பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், அதிமுக என்றால் சத்துணவு திட்டம், அதிமுக என்றால் தொட்டில் குழந்தை திட்டம், என்றும், 69 சதவீதம் இட ஒதுக்கீடு பெற்று அரசிலமைப்பில் சேர்த்தவர் ஜெயலலிதா என்றும் புகழாரம் சூட்டினார். தமிழகத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் துணை முதலமைச்சர் ஓ.பன்னிர்செல்வமும் சிறப்பாக ஆட்சி செய்வதாகவும் மருத்துவர் ராமதாஸ் பாராட்டு தெரிவித்தார்.
Discussion about this post