கை நிறைய சம்பளம் கொடுக்கும் கார்ப்பரேட் வேலையை விட பெற்றோருடன் விவசாயம் செய்வது மனநிறைவு தருவதாக கூறும் பட்டதாரி இளைஞர், விவசாயத்தில் ஆர்வம் காட்டி வருகிறார்.
திருவண்ணாமலை மாவட்டம் இனாம் காரியத்தல் பகுதியைச் சேர்ந்தவர் பவுன் குமார். பட்டதாரியான இவர், கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக சென்னையில் உள்ள கார்பரேட் நிறுவனத்தில் போதுமான வருமானத்துடன் வேலை செய்து வந்துள்ளார். இருப்பினும் விவசாயத்தின் மீது கொண்ட ஆர்வம் கொண்ட பவுன் குமார், தனது பெற்றோருடன் சேர்ந்து 5 ஏக்கர் நிலத்தில் நெல், சாமந்திப்பூ, சம்பங்கி, வெள்ளரிக்காய் உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்து வருகிறார். மேலும் ஆடு, மாடு வளர்ப்பதிலும் ஆர்வம் காட்டி வருகிறார். இதன் மூலம் நல்ல வருமானம் கிடைப்பதால், பெற்றோருடன் வசித்து வருவதாகவும், மனநிறைவு கிடைப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.