தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே புதிதாக இரண்டு தடுப்பணைகள் கட்டப்படும் என அறிவித்துள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு விவசாய சங்கங்கள் நன்றி தெரிவித்துள்ளன.
தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில் 72 கோடி ரூபாய் மதிப்பில் அணைக்கட்ட நிலம் கையகப்படுத்தப்பட்டு வருவதாக பேரவையில் முதலமைச்சர் தெரிவித்து இருந்தார். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள விவசாயிகள், உள்ளாட்சி பிரதிநிதிகளின் கோரிக்கையை ஏற்று தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே 2 புதிய தடுப்பணைகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். இதனை வரவேற்றுள்ள தமிழக விவசாயிகள் சங்கத்தினர் முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்தனர்.