ஆப்கானிஸ்தானின் கஜினி நகரத்தில் உளவு படையினரை குறிவைத்து வெடிகுண்டுகள் நிரப்பிய காரை மோதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் 2001-ம் ஆண்டு தொடங்கி இன்று வரை நடந்து வருகிற போரை முடிவுக்கு கொண்டு வந்து விட வேண்டும் என்பது அமெரிக்காவின் விருப்பம். இதற்காக தாலிபான் பயங்கரவாத அமைப்பின் பிரதிநிதிகளோடு அமெரிக்க அரசின் பிரதிநிதிகள் நேரடி பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
கத்தார் நாட்டின் தலைநகரான டோஹாவில் 7-வது சுற்று பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. ஆனாலும் போர் நிறுத்தம் செய்ய மாட்டோம் என்று தாலிபான்கள் அறிவித்து, தொடர்ந்து தாக்குதல்கள் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், கஜினி நகரத்தில் உளவுப்படையினரை குறிவைத்து வெடிகுண்டுகள் நிரப்பிய காரை மோதி வெடிக்க வைத்தனர். இந்த கார் குண்டு வெடிப்பில் 14 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். 180 பேர் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்களை மீட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு தாலிபான் பயங்கரவாதிகள் பொறுப்பு ஏற்றுள்ளனர்
Discussion about this post