அதிமுக மாவட்ட கழக நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் 2வது நாளான இன்று, கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் தலைமையில் நடைபெறுகிறது.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வளர்ச்சிப் பணிகள் குறித்தும், தேர்தல் பணிகள் குறித்தும், அனைத்து மாவட்டங்களின் தலைமை கழக நிர்வாகிகள், செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர் பெருமக்கள் ஆகியோர் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டம், அதிமுக தலைமைக் கழகத்தில் நேற்று காலை, மாலை என இரு வேளைகளில் நடைபெற்றது.
கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்த நிலையில் இரண்டாம் நாளான இன்று காலை 10 மணிக்கு திருவண்ணாமலை வடக்கு, திருவண்ணாமலை தெற்கு, நீலகிரி, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி வடக்கு மற்றும் தூத்துக்குடி தெற்கு கழக நிர்வாகிகளுடனும், மாலை 4:30 மணிக்கு கன்னியாகுமரி கிழக்கு, கன்னியாகுமரி மேற்கு, கடலூர் கிழக்கு, கடலூர் மத்தியம், கடலூர் மேற்கு, திருவள்ளூர் கிழக்கு மற்றும் திருவள்ளூர் மேற்கு கழக நிர்வாகிகளுடனும் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.இதனிடையே 13 ஆம் தேதி நடைபெற இருந்த ஆலோசனைக் கூட்டம் 15 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.
Discussion about this post