ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு அதிமுக நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் அமைச்சர்கள் தலைமையில் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற இடைத்தேர்தல் வரும் 19ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் போட்டியிட உள்ள அதிமுக வேட்பாளர் மோகனுக்கு ஆதரவாக முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் ஆகியோர் தீவிர பிரசாரம் மேற்கொண்ட நிலையில், இரண்டாம் கட்ட பிரசாரத்திற்காக துணை முதலமைச்சர் நாளை வர உள்ளதாகவும் அதனைத் தொடர்ந்து 12 ஆம் தேதி முதலமைச்சர் வரவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அமைச்சர் காமராஜ் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு, சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் மற்றும் மாவட்ட செயலாளர் சண்முகநாதன் உள்பட கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.