திருவாரூரில் விவாசாயிகளை கொண்ட குழு அமைத்து குடிமராமத்து திட்டத்தினை செயல்படுத்துவது குறித்து மாவட்ட ஆட்சியர் ஆலோசனை நடத்தினார்.
தமிழக முதலமைச்சர் அறிவித்துள்ள குடிமராமத்து திட்டத்தின் கீழ், திருவாரூர் அருகே உள்ள ஒட்டக்குடி கிராமத்தில், விவசாயிகளை கொண்ட குழு அமைத்து பாசன வாய்க்கால்களை தூர்வாருவது குறித்த ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது.
தமிழகத்தின் நீராதாரங்களை செம்மைப்படுத்தும் விதமாக குடிமராமத்து பணிகளை மேற்கொள்ள அரசு உத்தரவிட்டதன் அடிப்படையில் திருவாரூர் மாவட்டத்தில் நீர்வள ஆதார துறையின் மூலமாக 95 பணிகளை 16 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் 90 சதவீதம் அரசு நிதியாகவும் 10 சதவீதம் விவசாயிகள் பங்களிப்பாகவும் இருக்கும். இக்கூட்டத்தில் குடிமராமத்து திட்டத்தினை தங்கள் கிராமத்தில் செயல்படுத்த ஏற்படுத்தபட்டுள்ள விவசாயிகளை கொண்ட குழுவின் பட்டியலை மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் அளித்தனர்.
Discussion about this post