சென்னை மாநகராட்சிக்குபட்ட பகுதிகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்பாட்டை கண்காணிக்கவும், கட்டுப்படுத்தவும் 200 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி ஆணையர் தலைமையில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்பாட்டை கட்டுப்படுத்துவது தொடர்பாக ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது . இந்த கூட்டதில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட வார்டு ஒன்றுக்கு ஒரு குழு என இருநூறு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது . வருவாய்த்துறை, சுகாதாரத்துறை மற்றும் பொறியாளர் பிரிவு என மூன்று அலுவலர்கள் கொண்ட குழுவினர் தங்களது வார்டுக்குள் தினமும் ஆய்வு மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆய்வின்போது பிளாஸ்டிக் பயன்பாட்டை முதல் முறை கண்டறிந்தால் நோட்டீஸ் வழங்கவும், பின்னர் மீண்டும் பயன்படுத்தினால் உரிமத்தை ரத்து செய்ய பரிந்துரைக்கவும் குழுவினருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது .