விவசாயிகளின் பங்களிப்புடன் குடிமராமத்து திட்டப் பணிகளை அரசு வெற்றிகரமாக செயல்படுத்தி வருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்தும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு மேற்கொண்டார். மேலும், மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்தினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர், கொரோனா பரவலை தடுக்க பல்வேறு சிறப்பு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருவதாக தெரிவித்தார். இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் குணமடைந்தோர் சதவீதம் அதிகம் எனக் கூறிய முதலமைச்சர், கொரோனாவால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட கூடாது என்பதற்காக பல்வேறு திட்டங்களை அரசு வகுத்துள்ளதாகவும் குறிப்பிட்டார். அனைத்து மாவட்டங்களிலும் விவசாயிகளின் பங்களிப்புடன் குடிமராமத்து திட்டப் பணிகளை அரசு வெற்றிகரமாக செயல்படுத்தி வருவதாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
Discussion about this post