அதிமுகவின் தலைமைக் கழக அறிக்கையானது இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்களின் ஒப்புதலோடு அறிவிக்கப்பட்டிருக்கிறது. அவ்வறிக்கையில் மார்ச் 8ம் தேதியை ஒட்டி சர்வதேச மகளிர் தின கொண்டாட்டம் கோலகலமாக எம்.ஜி.ஆர் மாளிகை அருகில் உள்ள ஹேமமாலினி திருமண மண்டபத்தில் காலை 9.30 மணியளவில் கொண்டாடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் தலைமை தாங்குவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. இவ்விழா கழகத்தின் மகளிர் அணி சார்பில் கொண்டாடப்படும் என்றும், கழகத்தின் நிர்வாகிகள், அதிலும் குறிப்பாக பெண் நிர்வாகிகள் அனைவரும் கலந்துகொள்ளுமாறு சொல்லப்பட்டுள்ளது.
அதிமுக மகளிர் தின கொண்டாட்டம் தொடர்பான அறிக்கை வெளியீடு!
