திமுக அரசு ஆட்சியேற்று 21 மாதங்கள் ஆகிய நிலையில் பெண்களுக்கு வழங்க இருக்கும் உரிமைத் தொகையில் 21 மாதங்களுக்கு சேர்த்தும் உரிமைத் தொகையினை வழங்கவேண்டும் என்று அதிமுக கொறடா எஸ்.பி. வேலுமணி அவர்கள் சட்டசபையில் வலியுறுத்தியுள்ளார். அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட கோவை விமான நிலைய விரிவாக்க திட்டம், பில்லூர் குடிநீர்த் திட்டம் போன்றவற்றை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
மேலும் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் திட்டத்தில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 4,085 கோடி ரூபாய் குறைவாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று கூறினார். இரண்டு கோடியே இருபது லட்சம் குடும்ப அட்டைத்தாரர் பெண்களுக்கு உரிமைத்தொகையானது அளிக்கப்படும் என்று தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிட்ட அரசு அதனை நடைமுறைப்படுத்த வழிவகை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.