அதிமுகவின் பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் செய்தியாளர்களை தலைமைச் செயலக வளாகத்தில் சந்தித்து சிறப்பு நேர்காணல் ஒன்றினை வழங்கினார். அதில் அவர் நிதியமைச்சருக்கு தன்னுடைய கண்டனத்தினைத் தெரிவித்துக் கொண்டார். அவர் பேசியதாவது,
சட்டசபையில் நிதியமைச்சர் வெள்ளை அறிக்கை ஒன்றினை வெளியிட்டார். அதில் 110 விதியின் கீழ் அதிமுக ஆட்சில் 2011 லிருந்து 2021 வரை செயல்படுத்தப் பட்ட திட்டங்களின் பட்டியல் குறிப்பிடப்பட்டிருந்தது. அவர் குறிப்பிட்ட வெள்ளை அறிக்கையின்படி அதிமுக ஆட்சியில் 1704 அறிவிப்புகள் சொல்லப்பட்டது. அதில் 1167 நிறைவெற்றப்பட்டது. மேலும் 491 நடைபெற்று வரும் பணிகளாக உள்ளது. இன்னும் 20 பணிகளுக்கு ஆணை வெளியிடப்பட்டுவிட்டது. சில தவிர்க்க முடியாத காரணங்களுக்காக 26 பணிகள் கைவிடப்பட்டு விட்டன. ஆக நிதியமைச்சரின் கூற்றின்படி அதிமுக ஆட்சியில் 68% பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளது. 491 நடைபெற்று வந்த பணிகளில் 29% நிறைவேற்றப்பட்டுவிட்டது. ஆனால் சட்டசபையில் நிதியமைச்சர் அதிமுக ஆட்சிகாலத்தில் எந்த பணியும் செய்யவில்லை என்று பொய் சொல்லி வருகிறார்.
அதிமுக ஆட்சியில் அட்சயப்பாத்திர திட்டம் ஒன்று கொண்டு வரப்பட்டது. அதன் முதற்கட்டம் சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மூலம் 35 ஆயிரம் குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கப்பட்டது. இன்றைக்கு திமுக கொண்டுவந்துள்ள காலை சிற்றுண்டி உணவுத் திட்டத்தின் முன்னோடி அதிமுக ஆட்சிகாலத்தில் கொண்டுவரப்பட்ட அட்சயப்பாத்திர திட்டம் தான் என்று எதிர்க்கட்சித் தலைவர் பேசினார்.