News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home அரசியல்

தன்னாலே வெளிவரும் தயங்காதே! ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே!.. பொதுச்செயலாளர் எடப்பாடி கே பழனிசாமி கடந்து வந்த பாதை!

Web team by Web team
March 28, 2023
in அரசியல், தமிழ்நாடு
Reading Time: 1 min read
0
edappadi k palanisami
Share on FacebookShare on Twitter

வருடம் 1952, நாள் மே 12. சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே சிலுவம்பாளையத்தில் ஒரு விவசாயியின் வீட்டில் பிறந்தது ஒரு குழந்தை. அக்குழந்தைக்கு பழனிசாமி என்கிற பெயரைச் சூட்டினார்கள் பெற்றோர்கள். சாதாரண விவசாயி வீட்டுப்பிள்ளையாக பிறந்த அக்குழந்தை வருங்காலத்தில் தமிழ்நாட்டினை ஆளும் முதலமைச்சராக ஆகப்போகிறது என்று யாரும் எதிர்ப்பாத்திருக்கக்கூட மாட்டார்கள். ஆனால்.. அது நடந்தது. ஆம் அவர்தான் முன்னாள் தமிழக முதலமைச்சரும் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள். கருப்பக் கவுண்டருக்கும் தவசியம்மாளுக்கும் பிறந்த விவசாயிகளின் தலைமகனான இவர் அரசியலுக்கு வருவதற்கு முன் வெல்ல வியாபாரம்தான் பார்த்து வந்தார்.

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் தீவிரமான ரசிகராக இருந்துவந்த எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் எம்.ஜி.ஆரின் மீதுள்ள பற்றின் காரணமாக அதிமுகவில் தன்னை இணைத்துக்கொண்டார். சாதாரணத் தொண்டரில் இருந்து கிளைச்செயலாளராக பதவி உயர்வு பெற்றார் எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள்.  புரட்சித் தலைவரின் மீது எந்த அளவிற்கு பற்றுக் கொண்டவராக இருந்தாரோ அதே அளவிற்கு புரட்சித் தலைவி அம்மா மீதும் மிகுந்த பற்றும் விசுவாசம் கொண்டவராகவே இருந்தார். அதற்கு தலையாய உதாரணம் ஒன்று உண்டு. புரட்சித் தலைவரின் மறைவிற்கு பிறகு, புரட்சித் தலைவி ஜெயலலிதா அவர்களின் தலைமையில் ஜெ அணி என்றும், ஜானகி எம்.ஜி.ஆர் அவர்களின் தலைமையில் ஜானகி அணி என்றும் அதிமுக இரண்டாகப் பிரிந்தது. புரட்சித் தலைவி அவர்கள்,  ஜெ அணிதான் உண்மையான அதிமுக என்று தேர்தலில் போட்டியிட்டு வெற்றிப்பெற்று அதிமுகவை மீட்டெடுத்தார். அதற்கான தேர்தல் 1989 ஆம் ஆண்டில் நடைபெற்றது. ஜெ அணியில் புரட்சித் தலைவி அவர்களுக்கு உறுதுணையாக நின்று சேவல் சின்னத்தில் போட்டியிட்டார் எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள். அவர் போட்டியிட்ட எடப்பாடி தொகுதியில் மாபெரும் வெற்றிபெற்று சட்டமன்றத்திற்குள் நுழைந்தார்.

புரட்சித் தலைவியின் விசுவாசமிக்க உண்மையான ஆதரவாளரான எடப்பாடி கே.பழனிசாமி அவர்களுக்கு சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் ஒரு வாய்ப்பை புரட்சித் தலைவி அவர்கள் வழங்கினார்கள். அதன்படி 1991 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத்தேர்தலில் எடப்பாடி தொகுதியில் போட்டியிட்டு மாபெரும் வெற்றிபெற்றார் பழனிசாமி அவர்கள். புரட்சித் தலைவி அம்மா அவர்களின் அன்பையும் பாராட்டையும் பெற்ற எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு தேடி வந்தது மக்களவைக்கு செல்லும் வாய்ப்பு. திருச்சங்கோடுத் தொகுதியில் 1998 ஆம் ஆண்டு அதிமுக சார்பாக போட்டியிட்டு மாபெரும் வெற்றிபெற்று மக்களவையில் தன் முதல் அடியை எடுத்துவைத்தார். ஆரம்பம் முதல் வெற்றியையே பெற்று வந்த எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் தோல்வியையே சந்திக்கவில்லையா என்று கேட்டால், சந்தித்திருக்கிறார் என்பதே பதில். ஆம் களத்தில் நிற்கும் போர்வீரனுக்கு காயங்களும் தழும்புகளும் ஏற்படுவது சாத்தியம்தானே.. ஆனால் போர்க்களத்தைப் பார்த்து பயந்து புறமுதுகிட்டு ஓடாதவன்தான் உண்மையான போராளி. எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் ஒரு போராளியாக தோல்விகளை சந்தித்திருந்தாலும் மீண்டும் வெற்றி என்கிற நாற்காலியில் அமரும் தருணங்கள் நடந்தேறின.

1999,2004 ஆகிய மக்களவைத் தேர்தல்களிலும்..1996,2006 ஆகிய சட்டமன்றத்தேர்தல்களிலும் எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் தோல்வியைத் தழுவியிருந்தாலும் சாம்பலான நெருப்பிலிருந்தே புதிதாய் பிறந்து வரும் ஃபீனிக்ஸ் பறவைபோல 2011 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடித் தொகுதியில் மாபெரும் வெற்றி பெற்றார். அன்று வென்றது அவர் மட்டுமல்ல..ஒட்டுமொத்த தமிழ்நாடும் தான். விடியா திமுக ஆட்சியின் சாபப்பிடியில் இருந்து தமிழ்நாட்டைக் காத்த தாயாக புரட்சித் தலைவி இருக்க அவரது போர்ப்படையின் தளபதியாக எடப்பாடி பழனிசாமி அவர்கள் இருந்தார். 2011 ஆம் ஆண்டு சட்டமன்ற உறுப்பினர் என்கிற பதவி மட்டும் இல்லாமல், புரட்சித் தலைவி கொடுத்த நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுக அமைச்சர் பதவியும் அவரைத் தேடி வந்தது.

பின்னர் 2016 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல். புரட்சித் தலைவி அவர்கள் எந்த அளவிற்கு எடப்பாடி பழனிசாமி அவர்கள் மீது நம்பிக்கை வைத்திருந்துள்ளார் என்பதற்கு இந்தத் தேர்தல் ஒரு உதாரணம். இந்தத் தேர்தலில் எடப்பாடித் தொகுதியில் போட்டியிடுவதற்கு புரட்சித் தலைவி அவர்கள் பழனிசாமி அவர்களையே தேர்ந்தெடுத்தார். தன்னை புரட்சித் தலைவி அவர்கள் தேர்ந்தெடுத்தது சரிதான் என்பதை நிரூபித்து மாபெரும் வெற்றி பெற்றார். அதற்காக அவருக்கு கிடைத்த பரிசுதான் பொதுப்பணித்துறை அமைச்சர் என்கிற அங்கீகாரம். அதே வருடம் ஒரு சொல்லொணா துயரமும் அதிமுகவிற்கு ஏற்பட்டது.

2016 டிசம்பர் 5 ஆம் தேதி புரட்சித் தலைவி அவர்கள் இம்மண்ணுலகை விட்டு மறைந்தார். கட்சியும் ஆட்சியும் கேள்விக்குறியாய் நின்றது. கெட்டவர்கள் கையில் கட்சியும், தியாகிகள் போர்வையில் இருந்த துரோகிகள் கையில் ஆட்சியும் செல்லத் துணிந்தது. அப்போதுதான் புரட்சித் தலைவியின் நற்பெயருக்கும் கட்சியின் நற்பெயருக்கும் களங்கள் விளைவித்தவர்கள் கையில் இருந்த கட்சியும் ஆட்சியும் எடப்பாடி பழனிசாமி அவர்களைத் தேடி வந்தது.

எடப்பாடி பழனிசாமி அவர்கள் கட்சியை வளைத்தவர் இல்லை. கட்சியை வளர்த்தவர். கட்சியை உடைத்தவர் இல்லை. கட்சிக்காக உழைத்தவர். அப்படிப்பட்ட மாபெரும் மனிதருக்கு தமிழ்நாட்டின் முதலமைச்சர் பதவி தேடி வந்தது. அப்போது கூட அவர் தன்னுடைய ஆட்சி என்று எங்கேயும் சொல்லவில்லை. புரட்சித் தலைவி அம்மாவின் ஆட்சி என்றும் அம்மாவின் அரசு என்றும் தான் கூறினார். தலைகணமற்ற தற்புகழ்ச்சியற்ற தங்கமாக மக்களிடையே மின்னினார் எடப்பாடி பழனிசாமி அவர்கள். பிப்ரவரி 16, 2017ல் தமிழ்நாட்டின் மாண்புமிகு. முதலமைச்சராக பதவியேற்று 2021 ஏப்ரல் வரை சிறப்பான ஆட்சியைத் தமிழகத்திற்கு தந்தார் அவர். அதே சமயம் கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் பதவியிலும் தொண்டர்கள் அவரை அமர வைத்தனர். அதற்கு காரணம் கட்சி உடையாமல் நூற்றாண்டுகள் கடந்தும் நிலைத்திருக்கும் என்கிற புரட்சித் தலைவி அவர்களின் சொல்லாட்சிக்கு உறுதுணையாக இருக்கவே இணை ஒருங்கிணைப்பாளர் பதவியில் அமர்ந்தார். 2021ஆம் ஆண்டில் நடைபெற்றத் தேர்தலில் அவருக்கு மக்கள் அளித்ததோ எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்பு. சட்டமன்றத்தில் ஆளும் விடியா அரசை சரமாறியாக கேள்விகேட்டும் சரியாக விமர்சனம் செய்தும் தனது பொறுப்பினை உணர்ந்து கடமையாற்றி வருகிறார்.

Tamil Nadu: EPS takes charge of AIADMK in new era for the party - The Week

எல்லாமே சரியாக நடந்துகொண்டிருந்த சமயத்தில் உடன் இருந்தவர்களே முதுகில் குத்தும் கத்தியாக மாறிய காலம் வந்தது. . மீண்டும் அதிமுக என்கிற மாபெரும் மக்கள் இயக்கத்தை இரண்டாக பிளக்க சதி நடந்தது. அதே சமயம் அதிமுக தொண்டர்கள் எங்களுக்கு ஒற்றைத் தலைமைதான் வேண்டும் என்று எழுச்சியுடன் கூறி வந்தார்கள். எத்தனைத் தடைகள் வந்தாலும் அதனை உடைத்து முன்னேறினார் எடப்பாடி பழனிசாமி அவர்கள்.  கட்சியை மீண்டும் காப்பதற்காக அதிமுக பொதுக்குழுக்கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தொண்டர்களாலும் அதிமுக நிர்வாகிகளாலும் இடைக்காலப் பொதுச்செயலாளராக அனைவராலும் ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டார். கட்சிக்கு தூரோகம் விளைவித்தவர்கள் கட்சியில் இருந்து அகற்றப்பட்டனர். அதற்கு பிறகும் துரோகிகள் அதிமுக பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை கெடுக்க நினைத்து வழக்குகள் பல தொடுத்தனர். ஆனால் துரோகிகளுக்கு சம்மட்டி அடியாக உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு அமைந்தது. அதிமுக பொதுக்குழுத் தீர்மானங்கள் செல்லும் என்றும் அதிரடியான தீர்ப்பை அளித்து துரோகிகளுக்கு நெத்தியடியைக் கொடுத்தது. மழை விட்ட பிறகு துளிர்விடும் காளான் போன்று மீண்டும் மீண்டும் துரோகிகள் வந்தனர். பொதுக்குழுத் தீர்மானத்திற்கு தடை விதிக்க உயர்நீதிமன்றத்தை நாடினர். ஆனால் உயர்நீதிமன்றம் பொதுக்குழுத் தீர்மானத்திற்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்தது. இதற்கிடையே எடப்பாடி பழனிசாமி அவர்கள் மீது பொய்வழக்கினை வேறு சிலர் தொடுத்தனர். அதற்கு இந்த ஆளும் விடியா திமுக அரசும் ஆதராவக செயல்பட்டது என்பது உலகறிந்த உண்மை.

After Supreme Court judgment, EPS says 'truth has prevailed' | Cities News,The Indian Express

இப்படி தூரோகிகளும் எதிரிகளும் தன்னை சூழ்ந்தாலும் ஆழ்ந்து களமிறங்கி ஒவ்வொருவரையும் சிதறடித்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அதிகாரப்பூர்வ பொதுச்செயலாளராக எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் ஆகியுள்ளார். இல்லை இல்லை..ஆக்கியுள்ளனர் தொண்டர்கள் என்பதே சரி. தொண்டராக இருந்து பொதுச்செயலாளர் ஆக மாறுவது என்பது அதிமுகவில் மட்டுமே சாத்தியம். அதுவே அறத்தின் சத்தியம். இதனை நிகழ்த்திய காட்டி வரலாற்றில் இடம் பிடித்துள்ளார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள்.

தன்னாலே வெளிவரும் தயங்காதே!
தலைவன் இருக்கிறான் மயங்காதே!

Tags: #edappadipalanisamyadmk general secretaryAIADMKfeaturedvolunteer to general secretary
Previous Post

அதிமுக பொதுக்குழுத் தீர்மானம் செல்லும் மற்றும் பொதுச்செயலாளர் தேர்தல் செல்லும்.. உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

Next Post

அதிமுகவில் புதிய உறுப்பினர் சேர்க்கை படிவம் ஏப்ரல் 5 முதல் விநியோகிக்கப்படும் – பொதுச்செயலாளர் எடப்பாடி கே பழனிசாமி அறிக்கை!

Related Posts

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!
அரசியல்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!
அரசியல்

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!
அரசியல்

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!
அரசியல்

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!
அரசியல்

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
கொத்தடிமைகளின் கூடாரம் திமுக Vs ஆளுமையின் அடையாளம் அதிமுக!
அரசியல்

கொத்தடிமைகளின் கூடாரம் திமுக Vs ஆளுமையின் அடையாளம் அதிமுக!

September 27, 2023
Next Post
அதிமுகவில் புதிய உறுப்பினர் சேர்க்கை படிவம் ஏப்ரல் 5 முதல் விநியோகிக்கப்படும் – பொதுச்செயலாளர் எடப்பாடி கே பழனிசாமி அறிக்கை!

அதிமுகவில் புதிய உறுப்பினர் சேர்க்கை படிவம் ஏப்ரல் 5 முதல் விநியோகிக்கப்படும் - பொதுச்செயலாளர் எடப்பாடி கே பழனிசாமி அறிக்கை!

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version