பன்னிரெண்டாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு படிக்கக்கூடிய மாணவ மாணவியர்களுக்கு பொதுத்தேர்விற்கான வினா வங்கியைக் கொடுத்து ஊக்குவித்துள்ளார் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அவர்கள். கோவை குணியமுத்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவ மாணவியர்களுக்கு இலவசமாக வினா-விடை புத்தகத்தை வழங்கினார் முன்னாள் அமைச்சர் அவர்கள். இந்நிகழ்வை தன்னுட்டைய சுட்டுரை (டிவிட்டர்) பக்கத்தில் கீழுள்ளவாறு பதிவிட்டுள்ளார்.
கோவை குணியமுத்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 10 & 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவ மாணவிகளுக்கு இலவச வினா-விடை புத்தகங்களை வழங்கினேன். தொடர்ந்து 22 ஆண்டுகளாக இந்த இலவச வினா விடை புத்தகங்களை வழங்கி வருவதில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன். மாணவச் செல்வங்கள் பொதுத் தேர்வை தைரியத்துடன் எதிர்கொண்டு நல்ல மதிப்பெண்கள் பெற்று வாழ்வில் உயர்ந்த நிலையை அடைய வாழ்த்துகிறேன். இவ்வாறு அப்பதிவினில் முன்னாள் அமைச்சர்கள் கருத்து தெரிவித்துள்ளார்.
கோவை குணியமுத்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 10 & 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவ மாணவிகளுக்கு இலவச வினா-விடை புத்தகங்களை வழங்கினேன்.
தொடர்ந்து 22 ஆண்டுகளாக இந்த இலவச வினா விடை புத்தகங்களை வழங்கி வருவதில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன். (1/2) pic.twitter.com/zuIgGcktCL
— SP Velumani (@SPVelumanicbe) March 11, 2023