மகளிர் தினத்தை தனது இல்லத்தில் கொண்டாடினார் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி!

மார்ச் 8 ஆம் தேதியான நேற்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பாக பல மாவட்டங்களில் மகளிர் தினமானது சிறப்பாக கொண்டாடப்பட்டது. கழக இடைக்கால பொதுச்செயலாளர் தலைமையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள தனியார் மண்டபத்தில் அதிமுக சார்பாக மகளிர் நிர்வாகிகள் கலந்துகொண்டு மகளிர் தினவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

அதேபோல் அதிமுக கொறடா, முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி அவர்கள் தனது இல்லத்தில் மகளிர் தின விழாவைக் கொண்டாடினார். அதனையொட்டி அவர் தன்னுடைய சுட்டுரைப் பக்கத்தில் புகைப்படம் ஒன்றினைப் பகிர்ந்தார். அதில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, எனது மனைவி திருமதி. வித்யாதேவி மற்றும் கழக மகளிர் அணி நிர்வாகிகளோடு எனது இல்லத்தில் மகளிர் தின விழாவை கொண்டாடினேன் என்று கூறியிருந்தார்.

Exit mobile version